சென்னை ’ஃப்ரீடம்’ அறக்கட்டளை சார்பில் கிண்டியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு மற்றும் 'ரெஹாபேசிக்ஸ் - 2019' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் புரோகித்,
” பல்வேறு வகையான மனம், உடல் ரீதியான பாதிப்பில் இருப்பவர்களுக்கு டாக்டர் சுந்தர் எழுதியுள்ள 'ரெஹாபேசிக்ஸ் - 2019' என்னும் புத்தகம் ஒரு மருந்தாகவும், மருத்துவமாகவும் இருக்கும். மருத்துவர்களுக்கும் இது மிகச்சிறந்த பயனை அளிக்கும். இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று.
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் ஃப்ரீடம் அறக்கட்டளையால் கொடுக்கப்படுவதுடன் மனரீதியான மறுவாழ்வும் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.