சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லத்தில் இருந்து கோட்டையை நோக்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பாக பேரணி நடைபெற்றது. இதில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
- போக்குவரத்து ஊழியர்களின் காப்பீட்டுத் தொகை, 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே நடத்த வேண்டும்.
- போக்குவரத்து கழகங்கள் செலவு செய்த தொழிலாளர்களின் பணம் ரூ.11,000 கோடியை திருப்பி வழங்க வேண்டும்.
- தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.
- ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.
- பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
- போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்க அரசு வழங்க வேண்டும்.
- போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த வேண்டும்.