தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘ஆழ்துளைக் கிணறுகளை மூட அரசு உத்தரவிட வேண்டும்’ - கே.எஸ். அழகிரி - government should order closure of the deep wells

சென்னை: திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட, அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

k s alagiri

By

Published : Oct 30, 2019, 1:33 PM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் குடும்பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

K.S. Alagiri

அதைத் தொடர்ந்து நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அழகிரி, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி விலை கொடுத்து வாங்கப்பட்டது என்று விமர்சித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details