சென்னை:Tamilnadu government school students increased: கடந்த 2020-21 கல்வியாண்டில் அதற்கு முந்தைய கல்வியாண்டை விட 1 லட்சத்து 28ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக, அரசுப் பள்ளியில் சேர்ந்த நிலையில், நடப்புக் கல்வியாண்டில் மொத்தம் 6.73 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாணவர்களுக்கான கற்றல் சூழ்நிலை மற்றும் உயர் கல்வி சேர்க்கையில் ஏற்படும் பாதிப்பு போன்றவை காரணமாகத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் பல இடங்களில் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தினால் பெற்றோர் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.
நடப்புக் கல்வியாண்டில் புதிய மாணவர்கள்
அரசுப் பள்ளிகளில் நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் 46லட்சத்து 50ஆயிரத்து 671ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 53 லட்சத்து 24ஆயிரத்து 009 ஆக அதிகரித்துள்ளது . இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 6 லட்சத்து73 ஆயிரத்து 338அதிகம் ஆகும்.