தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"கூவம் நதியை சீரமைக்க அரசாணை வெளியீடு"! - 110 rule

சென்னை: கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற சீரமைப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

revamp

By

Published : Aug 22, 2019, 4:13 PM IST

கடந்த ஜீன் 28ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. அதில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைச் சேர்ந்த முக்கிய நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகள் அமைத்தல், புனரமைத்தல் பணிகளுக்காக 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு, கூவம் நதிகளுக்கான சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதனைத் தொடர்ந்து, தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்து வலுப்படுத்துதல், போன்ற பணிகளை செயல்படுத்த திட்டமிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை

மேலும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் ’ என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details