தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு! - மருத்துவ உபகரணங்கள்

சென்னை: கரோனா தடுப்பு பணிக்காக கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க 21 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

assembly
assembly

By

Published : Jun 17, 2020, 4:44 PM IST

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், அதைத் தொடர்ந்து கரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக முகக் கவசங்கள், முழு உடல் மறை உடைகள், உடல் வெப்பத்தை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்டவை வாங்க அரசு 21 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கிருமி நாசினிகள், தெளிப்பான்கள், குளோரின், தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், மின் பயன்பாடு, வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்காவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இதையும் படிங்க: பொது ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் - தலைமைச் செயலாளர் சண்முகம்

ABOUT THE AUTHOR

...view details