தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?

சென்னை: கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

assembly
assembly

By

Published : May 6, 2020, 1:04 PM IST

தமிழ்நாடு அரசு, கரோனா வைரஸ் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர தடுப்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள், மற்றும் பொது மக்களிடமிருந்து 30.4.2020 அன்றுவரை, மொத்தம் 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து

558 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஐந்து நாள்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:

  • தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் - 20 கோடி ரூபாய்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் - 5 கோடி ரூபாய்
  • எம்.ஆர். எப் பவுண்டேஷன் - 4 கோடி ரூபாய்
  • அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் - 3 கோடியே 70 லட்சம் ரூபாய்
  • இந்தியன் வங்கி - 1 கோடி ரூபாய்
  • எச்.வி.எப் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் - 66 லட்சத்து 67 ஆயிரத்து 470 ரூபாய்
  • தமிழ்நாடு கிராம வங்கி - 25 லட்சத்து 38 ஆயிரத்து 514 ரூபாய்
  • மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் - 15 லட்சத்து 89 ஆயிரம் 535 ரூபாய்
  • தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை முதுநிலை பொறியாளர்கள் சங்கம் - 15 லட்சத்து 78 ஆயிரத்து 708 ரூபாய்
  • மோபிஷ் இந்தியா பவுண்டேஷன் - 15 லட்சம் ரூபாய்
  • தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் - 14 லட்சத்து 65 ஆயிரத்து 999 ரூபாய்
  • திருவாவடுதுறை ஆதீனம் - 12 லட்சம் ரூபாய்
  • ராயின் - 10 லட்சம் ரூபாய்
  • கோனே எலிவேட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் - 10 லட்சம் ரூபாய்
  • பிரிமியர் பைன் லைன்ஸ் பிரைவேட் லிமிடெட் - 10 லட்சம் ரூபாய்
  • Stahli இந்தியா பிரைவேட் லிமிடெட் - 10 லட்சம் ரூபாய்
  • ஸ்ரீ சந்தான கிருஷ்ண சில்க்ஸ் - 10 லட்சம் ரூபாய்

ஐந்து நாள்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து 41 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 882 ரூபாய் வரப்பெற்றுள்ளது. இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் ஆகும்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் உரையால் எந்தப் பயனும் இல்லை: முத்தரசன் காட்டம்

ABOUT THE AUTHOR

...view details