தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! - தமிழக அரசு வெளியீடு! - தமிழக அரசு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்களுக்கு கரோனா இல்லை என்ற மருத்துவச்சான்று கட்டாயம் என அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

regulations
regulations

By

Published : Dec 26, 2020, 7:23 PM IST

கரோனா அச்சத்தால் ஜல்லிக்கட்டு போட்டியை பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த, தமிழக அரசு கடந்த 23 ஆம் தேதி அனுமதித்தது. இந்நிலையில் போட்டி நடத்துவதற்கான மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • ஜல்லிக்கட்டு காளைகளுடன் வழக்கமாக 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில், இந்தாண்டு காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி.
  • ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் பரிசோதனை செய்து கரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற வேண்டும்.
  • காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும்.
  • அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.
  • ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம் வழங்கும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
  • அடையாள அட்டை இல்லாத மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி இல்லை.
  • தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
  • நடைமுறைகளை மீறுவோர் உடனடியாக ஜல்லிக்கட்டு வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
  • ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அலுவலர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.
  • எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.
  • மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50% அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ள அனுமதி.
  • போட்டியைக் காண பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே அனுமதி.

உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details