தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பணியிட மாற்றம்! - மதுரை மீனாட்சியம்மன் கோவில்

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் உள்பட நான்கு இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

religious
religious

By

Published : May 23, 2020, 7:02 PM IST

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்து சமய அறநிலையத்துறையைச் சார்ந்த நான்கு இணை ஆணையர்களை பணிமாறுதல் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி,

மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையராக பதவி வகித்த நடராஜன், சேலம் மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவேற்காட்டில் பணியாற்றிய செல்லத்துரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராக சி.இலட்சுமணனும், கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் இருந்த பி.கவிதா பிரியதர்ஷினி, சென்னை தலைமையிட அறநிலையத்துறைக்கு இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீண்ட நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறக்க அரசு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details