தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

147 பூங்காக்களில் உடற்பயிற்சி கூடம் - அரசு அனுமதி - ஜிம்

சென்னை: தமிழ்நாட்டில் போதிய வசதியுள்ள 147 பூங்காக்களில் உடற்பயிற்சி கூடம், யோகா மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

gym
gym

By

Published : Sep 5, 2020, 9:37 AM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், ”சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம், விதி 110 இன்கீழ் முதலமைச்சர் பழனிசாமி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் போதிய இடவசதி உள்ள பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், யோகா மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் போதிய இட வசதியுள்ள 147 பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களை பொது நிறுவனங்கள், தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்திட அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், யோகா, உடற்பயிற்சிக் கூடங்களை ஒரே மாதிரியாக அமைத்து செயல்படுத்தும் விதமாக, அதற்கான மாதிரி வடிவமைப்பு, திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்களில் பொருத்தப்படும் உபகரணங்களின் தரம், விவரக் குறியீடு முதலானவை வழங்கப்படும்.

120 சதுர மீட்டர் பரப்பளவிற்கு குறைவில்லாத இடத்தில், யோகா மையக் கட்டடங்கள் கட்டவும், 100 சதுர மீட்டர் பரப்பளவிற்கு குறைவில்லாமல் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கவும் வேண்டும். மேலும், யோகா மைய கட்டடங்கள் நல்ல காற்றோட்டத்துடனும், அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்து செல்லும் வகையிலும் பாகுபாடின்றி பயன்படுத்தவும், பயிற்சி மேற்கொள்வதற்கான அனைத்து உபகரணங்களுடன் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்கவும் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உணவுப் பொருட்களில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து பாதுக்காத்துக்கொள்வது எப்படி? - மாநகராட்சி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details