தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, டிசம்பர் 13 வரை நடைபெற்றது. தற்போது தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ஆம் தேதி நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.