தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையை GCC மண்டலமாக உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டம்! - மனோ தங்கராஜ்

சென்னையை உலகளாவிய திறன் மையங்களின் (GCC) மண்டலமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

assembly
assembly

By

Published : May 4, 2022, 10:53 PM IST

சென்னை:சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ், உலகளவில் உள்ள உலகளாவிய திறன் மையங்களில் (GCC - Global Capability Centre), 45 சதவீத மையங்கள் இந்தியாவில் அமைந்துள்ளதாகவும், அதில் 9 சதவீத மையங்கள் தமிழ்நாட்டில் இயங்கி, ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்தார்.

GCC மையங்களைப் பொறுத்தவரை முதலிடத்தில் பெங்களூரு இருந்தாலும், சென்னையை முதலிடத்துக்கு கொண்டுவரவும், ஓசூர், மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களையும் வளர்த்தெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போது தமிழ்நாட்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணிபுரியும் வகையில் 190-க்கும் மேற்பட்ட GCC-க்கள் இருப்பதாகவும், குறிப்பிட்ட GCC கொள்கை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப சூழலமைப்பை சந்தைப்படுத்துவது போன்றவற்றின் மூலம் GCC மையங்கள் 2030-ம் ஆண்டுக்குள் 5 மடங்கு அதிகமாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புதிதாக தங்கள் அலுவலகங்களை அமைக்கும் நிறுவனங்கள் தடையற்ற அனுபவத்தை உணரும் விதத்தில் அவர்களுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் GCC-க்கள் சீரான இடைவெளியில் எளிதாக தமிழ்நாட்டுக்கு வர முடிவதுடன், சென்னையை ஒரு GCC மண்டலமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமனம் - பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details