சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க புதிய குழு அமைத்து நேற்று (மார்ச் 5) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே, வாங்கப்பட்டு வரும் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை மறு சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் சமஸ், ஜெயராணி, தினேஷ் அகிரா உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க புதிய குழு - போட்டித்தேர்வு
தமிழ்நாடு அரசின் நூலகங்களுக்கு வேண்டிய நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் வாங்கும் பணிகளை மேற்கொள்வதற்காக புதிய குழு அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அரசாணை வெளியீடு
மேலும் இது தொடர்பாக, அக்குழுவிற்கு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 640 அரசு நூலகங்களில் மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராவோர் பயன்பெறும் வகையில் நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க ஏதுவாக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்