தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு! - கல்பனா சாவ்லா விருது

சென்னை: துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ’கல்பனா சாவ்லா விருது' பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

assembly
assembly

By

Published : Jun 5, 2020, 6:44 PM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ ஒவ்வொரு ஆண்டும் துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ’கல்பனா சாவ்லா விருது’, விடுதலை நாள் விழாவின்போது முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. விருதோடு ஐந்து லட்சத்திற்கான காசோலையும், ஒரு பதக்கமும் சேர்த்து வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெற தகுதியுள்ளவர்.

இந்நிலையில், 2019ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், ’அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600009 ’ என்னும் முகவரிக்கு 30.06.2019க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details