தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு பட்ஜெட் நிகழ்வுகள் உடனுக்குடன்.! உள்ளங்கையில்..! - Tamilnadu Budget 2020-2021

Tamilnadu Government budget Session 2020 Live update
Tamilnadu Government budget Session 2020 Live update

By

Published : Feb 14, 2020, 9:39 AM IST

Updated : Feb 14, 2020, 7:48 PM IST

09:28 February 14

தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கலாகிறது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாநிலத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கும்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள், தாலுக்காக்கள் உதயமாகியுள்ள நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்துமுடிந்து விட்டதால் மராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 2ஏ, குரூப்4 உள்ளிட்ட தேர்வுகள் முறைகேடு, காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு உள்ளிட்டவைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னை கிளம்பும் என்றும் தெரிகிறது.

ஆகவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

நிதியமைச்சர் சட்டப்பேரவை வருகை

தமிழ்நாட்டின்ந நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவைக்கு வந்தார். காலை 10 மணிக்கு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

மு.க.ஸ்டாலின் வருகை

இன்னும் சற்று நேரத்தில் மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கலாகும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வந்தார்.

நிதிநிலை அறிக்கை பெட்டியில் ஜெயலலிதா படம்

நிதி நிலை அறிக்கை பெட்டியில் திருச்செந்தூர் முருகன் கோயில் புகைப்படமும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்து ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை 2020-21 சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.

நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உரை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொள்கைப்படி அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும்.

ஆட்சி மாறிவிடும் என்று சிலர் கூறிவந்தனர். ஆனால் நமது அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் திறமையுடன் பயணிக்கிறது.

பிரபல ஆங்கிலப் பத்திரிகை எடப்பாடி பழனிசாமி ஆட்சியை பாராட்டியுள்ளது.

நிதிப் பற்றாக்குறை

தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. அது 2020-21ஆம் ஆண்டில் பத்தாயிரத்து 970 கோடியாக குறையும்.

பொருளாதார வளர்ச்சி

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளை தமிழ்நாடு திறம்பட சமாளித்துள்ளது. மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக உள்ளது.

தமிழ்நாட்டின் அரசின் கடன் ரூ.4,56 லட்சம் கோடி கடன்

2020-21ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4,56,660 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சி

கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில மற்றும் தொல்லியல் துறையின் ஒப்புதல் பெற்றுள்ளது. தொல்லியல் துறைக்கு 33.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தரவரிசையில் முதலிடம்

நிதி ஆயோக் வளர்ச்சி குறியீட்டில் தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. நிர்வாகம், சேவை வழங்கல் துறையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறோம்.

நல் ஆளுமை பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

புதிய திட்டங்கள்

வருவாய் பற்றாக்குறை ரூ.4025 கோடி வழங்க 15ஆவது நிதிக் குழு பரிந்துரை.

ஹார்வார்டு, ஹூல்டன் மற்றும் வாரணாசி பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்றுக் கொள்ள முயற்சி.

குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு உலக வங்கியிடமிருந்து கடன்.

சுகாதாரத்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.1200 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்த துறைக்கு இரண்டாயிரத்து 716 கோடி ஒதுக்கீடு.

நெல்லை மாவட்டம் கங்கைக்கொண்டான் பகுதியில் பிரமாண்டமான உணவுப் பூங்கா.

இணைய வழி குற்றங்களை தடுக்க பாதுகாக்க ரூ.27 கோடி செலவீடு.

ஒட்டுமொத்தமாக காவல்துறைக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

தீ விபத்துகளை நவீன முறையில் தடுக்க, நவீன கருவிகள் வாங்க ரூ.13 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு ரூ.405.68 கோடி ஒதுக்கீடு

தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டு வசதி வழங்கப்படும். இதுவரை ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களை வசித்து வந்த ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 463 குடும்பங்களுக்கு 35 ஆயிரத்து 470 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். மீதம் உள்ள குடும்பங்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை பிரத்தியேகமாக விசாரிக்க 16 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீதி நிர்வாகத்திற்காக 1403.17  கோடி ரூபாய் ஒதுக்கீடு

இயற்கை மரணம் அடைந்து வழக்கு இழப்பீடு 2 லட்சமாக உயர்த்தப்படும்

விபத்துகளால் உயிர்ழந்தவர்கல் 2 லட்சம் நிரந்தர ஊனமுற்றோருக்கு 4 லட்சம் உயர்த்தப்படும்

பேரிடர் மேலாண்மை ரூ.1, 360 கோடி ஒதுக்கீடு

விபத்து உள்ளிட்டவற்றில் மரணம் அடைவதற்கான இழப்பீடு 4 லட்சமாக உயர்த்தப்படும். நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 2 லட்சம் வரை இழப்பீடு

ஆழ்கடல் மீன்களில் தொடர்புகொள்ள இஸ்ரோ உருவாக்கிய டிரான்ஸ்பான்டாகள் படகுகளில் பொருத்தப்படும்

வரும் நிதியாண்டில் 10276 சீருடை பணியாளர் பணி அமர்த்த உள்ளனர்.

நிதி வளர்ச்சி

2018- 19 நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.17 சதவிகிதம்

2019- 20 தமிழக பொருளாதார வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருக்கும் என கணிப்பு

2019- 20 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய வளர்ச்சியைவிட தமிழக வளர்ச்சி அதிகமாக உள்ளது.

வேளாண்துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு!

ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம்

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பார் மாநிலம் முழுமையாக பொருட்கள் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்...

ரேசன் கடைகளில் துவரம் பருப்பு ஆயில் தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்

தமிழகத்தில் 8 பெரியத் திட்டங்களுக்கு மூதலீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் திட்டங்களில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயார் நிலையில் உள்ளது.

மடிக்கணிணி

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி மாநிலத்தில் 36.44 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தாெகையாக 7,618 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டிலும் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்   செயல்படுத்தப்படும்.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு

மின் உற்பத்தி நிலையங்கள் 

தென்மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும் சென்னை_கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மேம்படுத்துவதற்கும் ஒட்டப்பிடாரத்தில் 400 கிலோ வோல்ட் மற்றும் விருதுநகரில் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் இத்திட்டம் 4,650 கோடி ரூபாய் மொத்த செலவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 45.1 கோடி அமெரிக்க டாலர் கடன் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு வீடுகள்

அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு அடுக்கு மாடி குடியருப்பு சைதாப்பேட்டையில் 76 கோடி செலவில் அமைக்கப்படும்

அம்மா ஸ்கூட்டர் திட்டம் கீழ் இதுவரை 1.88 லட்சம் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளன.

பொருட்கள் மற்றும் சேவை வரிகளை பொருத்தமட்டில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2017-18 ம் ஆண்டிற்கான பொருட்கள் மற்றும் சேவை வரிகள் வரி 4073 கோடி நிழுவையில் இருப்பினும், மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவை தொகைகள் உரிய நேரத்தில் வரும் என எதிர்பார்த்தாலும் 2021-22 வரவு செலவு திட்டத்தில் 46,195,55 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு

ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாக்க தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை வெளியிடப்படும்

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2021-22 ம் ஆண்டில் 1,52,270,66 கோடி ரூபாயாகவும், 2022-23 ஆண்டில் 1,73,664,49 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 302.98 கோடியில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 11 வகுப்பு மற்றும் தொழில் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் மாணவர்களுக்கு 3.63 லட்சம் மிதிவண்டி 142.84 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார தேக்க நிலை

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரகளுகு பயிற்சி அளிக்கும் வகையில் உயரிய செயல்திறன் மையம் உருவாக்கப்படும்.

2019-20 ம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார் வாகன வரி வருவாய் , பொருளாதார தேக்க நிலையின் காரணமாக 6.018,63 கோடி குறைந்துள்ளது..

2020-21 ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 14,435,09 கோடியாகவும், பொதுவான பொருளாதார வளர்ச்சி படிப்படையில் வரும் ஆண்டுகளில் 14.0 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்துகளில் சிசிடிவி பொருத்தம்

அரசு பேருந்து பயண பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நிர்பயா நிதியம் மூலம் 75.02 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து பேருந்தில் பொருத்தப்படும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி பகிர்வு

2020- 21 ஆண்டில்  நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகர்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306.95 கோடி ரூபாயும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754.30 கோடி ரூபாயும் நிதிப்பகிர்வாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் பெற வேண்டிய 4,345.57 கோடி ரூபாயும், 2017-18 ம் ஆண்டு முதல் பெற வேண்டிய செயல்திறன் மானியமான 2,029.22 கோடி ரூபாயும் மாநில அரசு இன்று வரையில் பெறவில்லை. இந்நிலுவைகளை விடுவிக்குமாறு மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் 2020-21 ஆம் ஆண்டிற்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,607 கோடி ரூபாயும் , அதாவது மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் 5,344 கோடியா உயர்ந்துள்ளது.

அடிப்டை கட்டமைப்பு

மாநில ஆயத்தீர்வுகளில் 2020-21 ஆண்டில் 12 சதவிகித வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதே வளர்ச்சி விகிதத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..

நகர்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 3,607 கோடி ஒதுக்கீடு

பக்கிங்ஹாம் கால்வாய், கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகாலையும் 5439.76 கோடி செலவில் சீரமைக்கப் படும்

பொங்கல் பரிசு

பொங்கல்பரிசு மாணவர்களின் இலவச பயணச்சீட்டு உள்ளிட்ட மானியங்களுக்கான அரசின் செலவு 87ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது.

நடப்பாண்டில் பொங்கல்பரிசு, மாணவர்களுக்கான பேருந்து அனுமதி சீட்டு, சலுகைக்கான கூடுதல்ப் பொறுப்பு மற்றும் மின் மானியங்கள் ஆகியவை குறித்த மதிப்பீட்டு வரவு-செலவு 4 , 020 கோடியாக திட்ட மதீப்பீட்டுகளை காட்டிலும்  தற்போது 87, 487 கோடி  ரூபாயாக உயர்ந்துள்ளது.

வீடுகள்

பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2020- 21 இல் 1,12,876 தனி வீடுகள் மற்றும் 65,290  அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்

15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 50 நகர்புர உள்ளாட்சிகளுக்கு தனியே மானியம் வழங்க பரிந்துரைந்துள்ளது.  இந்தப் பரிந்துரையின்படி, தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாநகராட்சிகளுக்கு மொத்தமாக மானியமாக 556 கோடி ரூபாய் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2020-21 அண்டில் மாநிலத்திம் சொந்த வரி அல்லாத வருவாய் 15,898,81 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 ஆண்டுகளில் 17,806,78 கோடியாகவும், 2022-23 ஆண்டில் 19,943,59 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது..

தொழிற்சாலை

ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் சிப்காட் மற்றும் இதர நிறுவனங்களில் பங்களிப்பில் 15 கோடி ரூபாய் செலவில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொழில் துறையினர் தேவைக்கேற்ற பயிற்சிகள் வழங்கும் பிரிவுகள் சேர்க்கப்படும். 17.80 கோடி ரூபாய் செலவில் தொழிற்பிரிவுகள் முழுமையாக மாற்றி அமைக்கப்படும்.

தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 4.77 கோடி ரூபாய செலவில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு பயிற்சி வழங்க சிறப்பு திட்டம் தமிழக அரசு தொடங்கியுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்றுநார்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சென்னையில் மாநிலத் திறன் பயிற்சி நிலையம் 1.60 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

வணிக வரி வளர்ச்சி

வணிக வரியின் வளர்ச்சி விகிதம், தற்போதைய போக்கின் அடிப்படையில் 2021-22 மற்றும் 2022-23 ம் ஆண்டுகளில் 14.5 சதவிகிதம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்காக 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வீட்டு வசதி திட்டதுக்கு உலக வங்கியிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது- இதன்படி 45 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கப்படும்..முதற்கட்டமாக 20 கோடி டாலர் நிதியுதவி வழங்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ375 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்ப்பட்டுள்ளது. காவிரி முதல் வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.

அடிப்படைத் தேவை நிறைவு செய்ய 500 கோடி

கிராமப்புற, நகர்புரக் குடியிருப்பு பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்படாத மிக அத்தியவசியமான சிறு சிறு பணிகளை மேற்கொள்வதன் மூலம் அப்பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய இயலும்.

எனவே 2020-21 ஆம் ஆண்டில் இத்தகைய அத்தியவசியமான  உட்கட்டமைப்பு பணிகளை 500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கான ஒருமுறை சிறப்புத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மாநில உயர்மட்டக்குழுவின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும்.

பட்டா மாற்றம்

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71  கோடி ஒதுக்கீடு

7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

7,375 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் மேம்பாடு

ஊரகச்சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2019-20ஆம் நிதியாண்டில் 1200 கோடி ரூபாய் நிதியில்  ஊராட்சி ஒன்றிய, கிராமப்புறச் சாலைகளை தரம் உயர்த்திப் பராமரிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

2020-21ஆம் நிதியாண்டில் ரூ.1,400 கோடி செலவில் இந்த திட்டமானது செயல்படுத்தப்படும். இதன் மூலம் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின்  3ஆவது கட்டப்பணிகளின் கீழ் , தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற வேளாண் சந்தைகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை இணைக்கக்கூடிய வகையில் 7,375 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கணக்கில் செலவுகள்:

2019-20ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் 2,12,035,93 கோடி ரூபாயை காட்டிலும் 2019-20ஆம் ஆண்டு திருத்த மதிப்பீடுகள் 2,16,932,51 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வினாலும், இந்த ஆண்டு ஒப்பளிக்கப்பட்ட செலவினங்களினாலும் இது உயர்ந்துள்ளது.

2020-21ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் 2,40,992,78 கோடி ஆகும். வருவாய் கணக்கில் செலவினம் 2021-22 ம் ஆண்டில் வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் 2,67,949,42 கோடி எனவும், 2022-23 ல் 2,97,055,44 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்வழித்திட்டம்

சென்னை - பெங்களூர் தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பென்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு புதுமை முயற்ச்சிகள் திட்டத்தின் கீழான நிதி உதவியுடன் 53.44 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் தொழில் புதுமை முயற்ச்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும்.

34.81 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் வர்த்தக எளிதாக்குதல் மையம் ஒன்று சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைக்காக நாளென்றுக்கு 60 மில்லியன் லீட்டர் திறன் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையை 634 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு தொழில் மேம்பட்டு நிறுவனம் SIPCOT நிறுவும்.

மூலதனக் கணக்கு:

2020-21 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்கான செலவினம் 13,531,27 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. போக்குகளின் அடிப்படையிலும், வருங்கால பொருளாதார நிலவரப்படியும், 2021-22 ம் ஆண்டிற்கு 15,425,65 கோடி ரூபாயாகவும், 2022-23 ம் ஆண்டிற்கு 17,585,24 கோடி ரூபாயாகவும் முன் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

கண்பார்வையற்றோருக்கு திட்டம்

கண் பார்வைத்திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்பு கொள்வதற்கு தக்க செயல்களுடன் கூடிய திறன்பேசிகள் 10,000 பேருக்கு  10 கோடி செலவில் வழங்கப்படும்

காதுகேளாத 10 ஆயிரம் பேருக்கு, 10 கோடி ரூபாய் செலவில், திறன்பேசிகள் வழங்கப்படும்

1,580 கோடி மதிப்பீட்டில்,  2,213 பிஎஸ் ஸ்டேஜ் 6 மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்ட பேருந்துகள் வாங்க 2020-21 இல் 960 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடம் இருந்து நிதியுதவி பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்களை விரிவுபடுத்தும் வகையில் தற்போதுள்ள திட்ட முதலீட்டிற்கான வரம்பு 10 இலட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பும் 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 2.5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச மூலதன மானியத்தை 30 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சமாக அரசு உயர்த்தி வழங்கும்..

புத்தகப்பை

புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள், பென்சில்கள் உள்ளிட்டவற்றை விலையில்லாமல் வழங்குவதற்காக 2020-21 திட்டத்தில், 1,018,39 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக 966.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

158 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 277.88 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி உதவியுடன் உட்கட்டமைப்பு மேம்பாடு.

மத்திய அரசின் பேம் இந்தியா இரண்டு திட்டத்தின் கீழ் 525 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்புந்தம்

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிர்பயா திட்டத்தின் மூலம் 75.02 கோடி ரூபாய் செலவில் அனைத்து பேருந்துகளிலும் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

சென்னை மெட்ரோ ரயில்

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடத்துக்கு நிதியுதவி வழங்க ஜப்பான பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். சென்னை மெட்ரோ ரயிலுக்கு பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிக்க  ரூ.3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர்கள் நிதிக்கு சமமான பங்களிப்பை அரசு வழங்கும். அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு 207 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சென்னை பல்கலை ஓய்வூதிய நிதிக்கு 12 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டில், மாணவர்- ஆசிரியர் விகிதம் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும், போதுமான அளவில் உள்ளது.

உயர்கல்வி

ஏழை மாணவர்களும் உயர்கல்வி பெறும் வகையில் 

முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகளுக்காக ரூ. 506.04 கோடி ஒதுக்கீடு

கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி அரசு சார்பில் உட்கட்டமைப்பு வசதிக்காக 10 கோடி ஒதுக்கீடு.

கடன் நிர்ணையம்:

மத்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில், 2019-20 ம் ஆண்டு மற்றும் 2020-21 ம் ஆண்டிற்கான கணக்கீடுகளுக்கு மாநில மொத்த உற்பத்திக்கான சமீபத்திய முன் மதிப்பீடு ( தற்காலிகம்) பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.31,220.89 கோடி மூலதனச் செலவிற்கு ஒதுக்கீடு செய்யபட்டது. 2020-21 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.36,367 கோடி உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2021-22 மற்றும் 2022-23 ம் அண்டுகளில் 15.0 விழுக்காடு அளவிற்கு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநிலத்தின் நிதி ஒழுக்கத்தை பராமரிக்கும் அதே வேளையில் வளர்ச்சிக்கான செலவினங்களையும் அதிகரிப்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது. 2020-21 ஆண்டிற்கான வரசு செலவு திட்டத்தில் ரூ.21,671.22 கோடியாக மதிப்பிட்ட வருவாய் பற்றாக்குறை 2021-22 ம் ஆண்டில் ரூ.16,893.19 கோடி ரூபாயாக குறையும். இது 2022-23 ல் ரூ.10,970.47 கோடியாக மேலும் குறையும். இது மூலதன செலவிற்கு அதிக இடம் தரும் வகையில் உள்ளது.

மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்ட்டத்தினை செயல்படுத்த 959.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அரசு மருத்துவமனை சிகிச்சையின் தரத்தை உயர்த்த 260.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக 1,033.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 2020-21 இல் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 15,863.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை

தென் மாநிலங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்க்கும், துணைமின் நிலையங்களை மேம்படுத்தவும், ஓட்டப்பிடாரம் மற்றூம் விருதுநகர் துணைமின் நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்கவும் 2020-21 நிதியாண்டில் 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சென்னையில் தியாகராய நகர் போல மாநகரத்தில் பிறப் பகுதிகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு ஏற்பட்ட நட்டத்தில் 50 விழுக்காட்டை ஈடுசெய்ய  இந்த நிதியாண்டில் ரூ.4,265.56 கோடி ஒதுக்கீடு.

அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள்

அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட காப்பீடு தொகையாக  342 கோடி ரூபாய் மற்றும் 306.65 கோடி ரூபாய் 2020-21 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன் பணம் வழங்கப்படுவதற்கு 173.95 கோடி ரூபாய் இந்த வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர்கள் சம்பளங்கள் மற்றும் படிகளுக்கு 64,208.55 கோடி ரூபாயும், ஓய்வூதிய தாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க 32,009.35 கோடி ரூபாயும் சேர்க்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பு, திருச்சியில் ரூ.40 கோடியில் 1 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பு நிறுவப்படும்.

அரசு சேவைகளை தடையின்றி வழங்கவும், அனைத்து அரசு துறைகளுக்கும் ஒரே மாதிரியான தரவுகள் கிடைக்க உதவும் வகையில் தமிழ்நாடு மாநில குடும்பத்தரவு தளம் உருவாக்க 47.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 2020-21 இல் மொத்தமாக 153.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தமிழ்நாடு நிதியமைச்சர் பன்னீர்செல்லவத்தின் உரை நிறைவடைந்தது. 2020-21 பட்ஜெட் உரை மொத்தம் 3.15 மணி நேரம் வாசிக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து சட்டப்பேரவை வரும் 17ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 14, 2020, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details