தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவிரி டெல்டாவில் குடிமராமத்து பணிகள் - கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் - குடிமராமத்து

சென்னை: ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

assembly
assembly

By

Published : May 22, 2020, 6:01 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு, 67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 392 பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை கண்காணிப்பதற்காகவும், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், மாவட்ட வாரியாக மூத்த குடிமைப்பணி அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

  • தஞ்சை மாவட்டம் - ககன் தீப் சிங் பேடி
  • திருவாரூர் மாவட்டம் - ராஜேஷ் லக்கானி
  • நாகப்பட்டினம் மாவட்டம் - சந்திரமோகன்
  • புதுக்கோட்டை மாவட்டம் - அபூர்வா
  • கரூர் மாவட்டம் - கோபால்
  • திருச்சி மாவட்டம் - கார்த்திக்
  • அரியலூர் மாவட்டம் - விஜய்ராஜ் குமார்

ஆகியோர், சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, தங்கள் பணிகள் தொடர்பான அறிக்கையை தலைமைச் செயலாளருக்கும், முதலமைச்சர் அலுவலகத்திற்கும் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிமராமத்துப் பணிகள்

ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஆறுகள், வடிகால்களை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்கும் பொருட்டு சிறப்பு அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் இல்லத்தை, நினைவு இல்லமாக்க அவசர சட்டம்!

ABOUT THE AUTHOR

...view details