தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எல்லோருக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - நகைக்கடன்

கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்து, பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் யாருக்கெல்லாம் இது பொருந்தும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

waiver of Cooperative jewel loans
waiver of Cooperative jewel loans

By

Published : Sep 13, 2021, 4:53 PM IST

சென்னை : சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று (செப்.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து, அதன் மூலம் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

இந்த நகைக்கடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தள்ளுபடி செய்யப்படஉள்ளது. அதற்காக அனைத்து வங்கிகளிலும் 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கடன் பெற்ற கூட்டுறவு வங்கிகளின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் அனைத்தையும் பகுப்பாய்வு செய்து உண்மையான ஏழைக்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் நகை அடகு வைத்திருந்தால் தள்ளுபடி கிடையாது. அதோபோல 2021 மார்ச் 21ஆம் தேதிக்கு முன் பெற்ற கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் " எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details