தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் - twelfth

சென்னை: 11, 12ஆம் வகுப்புகளுக்கான 2020 மார்ச் பொதுத்தேர்வை எழுத, தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

exam
exam

By

Published : Dec 6, 2019, 7:23 PM IST

இது தொடர்பாக, அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் ஏற்கனவே எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், மார்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.

கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வர்களாக 11ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தற்போது மேல்நிலை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதுவதற்கும் 11ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், தனித்தேர்வர்கள் மீண்டும் தேர்வெழுத, சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்கள் தற்போது பயிலும் பள்ளிகள் மூலமே தேர்வெழுதுவதற்கு உரிய கட்டணத்தை செலுத்தலாம்.

மாணவர்கள்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக எழுதி தேர்ச்சிப் பெற்ற தேர்வர்களும் மார்ச் 2020, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

மேலும், தேர்வு எழுத விரும்புவோர், டிசம்பர் 11 முதல் 20ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை ’ www.dge.tn.gov.in ‘ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details