தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது வெளியிடப்பட்ட கால்நடைத்துறை கொள்கை விளக்க குறிப்பில், “விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-20 வரை 99,379 பெண் பயனாளிகளுக்கு 99,379 கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பசுக்கள் 11.99 லட்சம் கன்றுகளை ஈன்றுள்ளது. இவற்றின் மதிப்பு 99.31 கோடி ஆகும்.
ஆறு லட்சம் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்படும் - அரசு தகவல் - தமிழ்நாடு சட்டப்பேரவை
சென்னை: ஆறு லட்சம் விலையில்லா வெள்ளாடுகள் 2020 - 21 ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ளதாக கால்நடைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 2020 -2021 ஆம் ஆண்டிலும் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு 12,000 விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் விலையில்லா வெள்ளாடுகள் / செம்மறியாடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2019-20 வரை 11,67,674 ஏழைப் பெண்களுக்கு, 46,70,696 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடுகள் 78.13 லட்சம் குட்டிகளை ஈன்றது. அவற்றின் மதிப்பு ரூ.1953.44 கோடி ஆகும். இந்தத் திட்டத்தின்படி, 2020-21 ஆம் ஆண்டில் 1,50,000 பயனாளிகளுக்கு ஆறு லட்சம் வெள்ளாடுகள்/செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்' - பேரவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு!