தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கல்வியாளர் செல்வகுமாருக்கு தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருது! - கல்வியாளர் செல்வகுமார்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், உயர்கல்வி கற்க முடியாத சூழலிலுள்ள மாணவர்களுக்கு ‘ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை’ நிர்வாகியான செல்வகுமார் உதவி வருகிறார்.

கல்வியாளர் செல்வகுமார்
கல்வியாளர் செல்வகுமார்

By

Published : Aug 14, 2020, 6:36 PM IST

சென்னை: ‘ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை’ நிர்வாகியும் கல்வியாளருமான செல்வகுமாருக்கு தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருது வழங்கப்படவுள்ளது.

மாணவர் நலன் சார்ந்து இயங்கி வரக்கூடிய கல்வியாளர் செல்வக்குமாருக்கு தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருது வழங்கப்படுகிறது. சுதந்திர தினத்தில் முதலமைச்சர் இந்த விருதை வழங்குகிறார். 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, பட்டயச் சான்றிதழுடன் அப்துல்கலாம் விருது வழங்கப்படுகிறது.

இவர் ஆனந்தம் என்கிற அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவி புரிந்து வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், உயர்கல்வி கற்க முடியாத சூழலிலுள்ள மாணவர்களுக்கு இந்த அமைப்பின் மூலம் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

கல்வியாளர் செல்வகுமாருக்கு தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருது
கல்வியாளர் செல்வகுமாருக்கு தமிழ்நாடு அரசின் அப்துல் கலாம் விருது

தற்போது இந்த ‘ஆனந்தம் இளைஞர்கள் அறக்கட்டளை’ சார்பில் 365 மாணவர்கள் மருத்துவம் பயின்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details