இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதுவாக நோன்பு கஞ்சி தயாரிக்க ஆண்டுதோறும் பள்ளிவாசல்களுக்கு தமிழ்நாடு அரசு பச்சரிசி வழங்கிவருகிறது. கடந்தாண்டை போலவே, இந்தாண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
நோம்பு கஞ்சி: தமிழ்நாடு பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிசி - ramadan 2022 in tamil nadu
ரமலானை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தாண்டு நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக மொத்த அனுமதியின்கீழ் பச்சரிசி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி 6,000 மெட்ரிக் டன் பச்சரிசி மொத்த அனுமதியின் கீழ் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 13 கோடியே 53 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இதற்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000' - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் வர்வேற்பு