தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 13, 2020, 4:48 PM IST

ETV Bharat / city

விவசாயத்திற்கு 50 ஆயிரம் புதிய இலவச மின் இணைப்பு - பேரவையில் அறிவிப்பு!

சென்னை: விவசாயத்திற்கென ஐம்பதாயிரம் புதிய இலவச மின் இணைப்புகள் இந்தாண்டு வழங்கப்படுமென சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

thangamani
thangamani

சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் இத்துறைச் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில்,

எரிசக்தித் துறை அறிவிப்புகள்:

1. ஊராட்சி கோட்டையில் உள்ள கீழ் மேட்டூர் தடுப்பணை புனல் மின் நிலையம் 4 இன் 18 தடுப்பணைகளின் கதவுகளையும் செப்பனிடும் பணிகள் 35 கோடி ரூபாயில் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.

2. ஒரு திறன் கொண்ட சூரிய மின் நிலையம் 6 கோடி ரூபாய் மதிப்பில் சோதனை முறையில் அமைக்கப்படும்.

3. 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மேற்கூரைகள் 250 கோடி ரூபாயில் நிறுவப்படும்.

4. இந்தாண்டு 50 ஆயிரம் புதிய இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

5. மின் வாரிய அலுவலர்களின் பயன்பாட்டுக்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் மின் வாகனம் பயன்படுத்தப்படும்.

6. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பிரீபெய்டு மீட்டர்கள் 390 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

7. ’1912’ என்ற எண்ணில் மின் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் குறை தீர்க்கும் சேவை செயல்படுத்தப்படும்.

8. மின் வாரிய அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு 0.70 கோடி ரூபாய் மதிப்பில், 0.30 கோடி ரூபாய் வருடாந்திர செலவில் மேற்கொள்ளப்படும்.

9. திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தைப் பிரித்து, தென்காசி மாவட்டத்தில் புதிதாக மின் பகிர்மான வட்டம் 8.50 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.

10. அரசு அலுவலகங்களில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அலுவலக பயன்பாட்டுக்கும் முதல்கட்டமாக 75 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 மின் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

11. சென்னையில் போக்குவரத்து சமிக்ஞைகளை, 7.4 லட்சம் ரூபாய் மதிப்பில் சூரிய சக்தி மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அறிவிப்புகள்:

1. கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்தி வாழ்பவர்களுக்கு மறுவாழ்வு நிதி வழங்க 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

2. மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைக்கு 3.50 கோடி ரூபாய் வழங்கப்படும்.

3. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் மாதத் தொகுப்பூதியம், 2020 ஏப்ரல் முதல் வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு 15.42 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இதையும் படிங்க: திமுக ஆட்சிக்காலத்தில் மதுபாட்டிலில் திருக்குறளையா அச்சிட்டிருந்தீர்கள் ? - அமைச்சர் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details