தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் பிராணவாயு பற்றாக்குறை இல்லை - மருத்துவக் கல்வி இயக்குநர் உறுதி! - செங்கல்பட்டு மருத்துவமனையில் எத்தனை பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புக்கான காரணம் பிராணவாயு பற்றாக்குறை தான் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் தட்டுபாடு இல்லையென்றும், 13 பேரும் நோய் முற்றி சிகிச்சைப் பலனின்றி தான் இறந்தனர் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் உயிரிழப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் கிடையாது, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, tamilnadu dme narayanababu, chengalpattu hospital patients death, how many died in chengalpattu hospital, செங்கல்பட்டு மருத்துவமனையில் எத்தனை பேர் உயிரிழப்பு, no oxygen shortage in tn
dme narayanababu exposed about chengalpattu hospital patients death

By

Published : May 6, 2021, 8:17 PM IST

சென்னை:செங்கல்பட்டு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்துமருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், “தமிழ்நாட்டில் போதுமான படுக்கை வசதிகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு முதல் மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன.

இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 52,000 படுக்கைகளும், மருத்துவச் சேவை இயக்குநரகத்தின் கீழ் 30,000 படுக்கைகளும், பொது சுகாதார இயக்குநரகத்தின் கீழ் 30,000 படுக்கைகள் என, 1 லட்சத்து 12 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. மேலும் கரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் 25 ஆயிரம் படுக்கைகள் என, 1 லட்சத்து 40 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 25 ஆயிரம் படுக்கைகள் என, ஒரு லட்சத்து 65 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.

எனவே தினசரி வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அளவிற்குப் படுக்கை வசதி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு பிராணவாயு, ரெமிடெசிவர் மருந்தும் இருப்பில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 64 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியும் போட்டுள்ளோம்.

செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் இறந்த செய்தி அறிந்த உடன் ஆய்வு செய்தோம். அந்த மருத்துவமனையில் 22 கிலோ லிட்டர் கொள்ளவு கொண்ட பிராணவாயு டேங்கர் உள்ளது. அதில் சம்பவத்திற்கு முதல் நாள் 5 கிலோ லிட்டர் பிராணவாயு நிரப்பி உள்ளனர். மேலும் இரவு 1.30 நிமிடத்திற்கு 7 கிலோ லிட்டர் பிராணவாயு நிரப்பினர்.

12 கிலோ லிட்டர் பிராணவாயு கையிருப்பில் இருக்கிறது. மேலும் மருத்துவர்களும் உள்ளனர். மே 4ஆம் தேதி 440 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில், 310 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்தவர்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் தான்.

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு பேட்டி

கரோனா சிகிச்சை மற்றவர்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா இல்லாதவர்கள் 8 பேர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் வந்தவர்கள். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மதுராந்தகம், திண்டிவனம், திருக்கழுக்குன்றம் போன்ற பகுதிகளில் இருந்து வருகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றப் பின்னர் கடைசி நேரத்தில் தீவிர சிகிச்சைக்கு வருகின்றனர். இறந்தவர்கள் நோய் காரணமாகத்தான் இறந்துள்ளனர் என்பது தான் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவிற்கு மருத்துவர்கள் போதுமான அளவில் இருக்கின்றனர்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம் 6,800 பேர் வந்தனர். தற்பொழுது நோயாளிகள் எண்ணிக்கை கடந்தாண்டு இருந்ததை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே 35,000 செவிலியர்கள், 1000 மருத்துவர்கள் பணி நியமனம் செய்துள்ளோம். மேலும், பட்டமேற்படிப்பு முடித்த மருத்துவர்கள் 950 பேர் பணி நியமனம் செய்துள்ளோம்.

மேலும் ஏற்கனவே மினி கிளினிக்கில் பணியாற்றிய 1,200 மருத்துவர்களை பணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி நியமனம் செய்துள்ளோம். தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்கள் 1200 பேர் காலமுறை ஊதியம் அடிப்படையில் புதியதாக நியமனம் செய்துள்ளோம்.

மேலும் தனியார் செவிலியர் கல்லூரியில் படித்த 1,000 செவிலியர்களை சென்னையில் பணியாற்றவும், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் பணியாற்ற 1,500 செவிலியர்களையும் அளித்துள்ளனர். அவர்களில் செங்கல்பட்டுக்கு தேவையான அளவிற்கு மருத்துவர்கள், செவிலியர்களையும் நியமனம் செய்துள்ளோம்.

மருத்துவக்கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மருத்துவர்கள்,பயிற்சி மருத்துவர்களையும் தொடர்ந்து நியமனம் செய்துள்ளோம் என கூறினார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 320 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 100 பேர் பிராணவாயு வசதி கொண்ட படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில், மே 4ஆம் தேதி இரவு 8 மணி வரை 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்திருந்தனர். இச்சூழலில், அதே நாளில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details