தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை - Madras High Court Order

மத்திய, மாநில அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
Dgp Sylendra Babu order

By

Published : Jan 20, 2022, 10:51 PM IST

சென்னை: மத்திய, மாநில அரசு சின்னங்களை, முன்னாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை நிறுவன அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பல்வேறு ஆணையங்களில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்களாகவும், கொடிகளாகவும், பெயர் பலகைகளாகவும் பயன்படுத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் குற்றஞ்சாட்டியிருந்தது.

மேலும், கடிதங்களிலும் அரசுச் சின்னங்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதமன்றம் ஜன. 5ஆம் தேதி உத்தரவிட்டது

இந்நிலையில் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட பதவியில் உள்ள முக்கிய நபர்கள், அலுவலர்கள் தவிர மற்றவர்கள் யாரும் அரசுச் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் அரசின் சின்னங்களை தங்கள் வாகனங்களில் முத்திரையாகவும், லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டுகளில் முத்திரையாகவும் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மத்திய அரசின் சின்னங்கள், பெயர்களை தவறாக பயன்படுத்துதலுக்கு எதிராக மாநில அரசு சின்னங்கள், பெயர்கள் தடைச் சட்டம் 1950 மற்றும் விதிகள் 1982இன் படியும், இந்திய அரசு சின்னங்கள் தடைச் சட்டம் 2005இன் படியும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.

இந்தச் சட்டங்கள் மீறப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளிக்கலாம்.

மேலும், காவல் துறையினர் அரசு சின்னங்கள், பெயர்களை அனுமதியின்றி தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்கலாம். குறிப்பாக வாகனங்களின் பதிவு எண் பலகைகள் அல்லது வாகனத்தின் வேறு பகுதிகளில் அரசு சின்னங்கள், பெயர்களை தவறாக பயன்படுத்துவோர் மீது பிரிவு 177 மோட்டார் வாகனச் சட்டம் 1988 மற்றும் பிரிவு 50, 51 மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இன் படி நடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோல், அரசு சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்துவோரின் வாகனங்களை சாட்சிகள் முன்னிலையில் காவல் துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும்போது அந்த நிகழ்வினை காணொலி காட்சியாக பதிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 'எனக்கே வா.. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..' - பொள்ளாச்சி ஜெயராமன்

ABOUT THE AUTHOR

...view details