சென்னை:அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரமில் இருந்து வந்த தலா ஒருவர் உட்படத் தமிழ்நாட்டில் 30 பேருக்கு புதிதாகக் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 13 ஆயிரத்து 437 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 28 பேருக்கும், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவர் என 30 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 6 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 13 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34 லட்சத்து 53 ஆயிரத்து 320 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அடைந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.