மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அக்டோபர் 13ஆம் தேதிக்கான கரோனா தொற்று புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 288 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் இருந்து 1279 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் என 1280 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 4 கோடி 79 லட்சத்து 64 ஆயிரத்து 847 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 26 லட்சத்து 82 ஆயிரத்து 137 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 1453 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 26 லட்சத்து 30 ஆயிரத்து 654 என உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 15 நோயாளிகள் என 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 833 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 5,52,121
- கோயம்புத்தூர் - 2,44,416
- செங்கல்பட்டு - 1,70,120
- திருவள்ளூர் - 1,18,552
- ஈரோடு - 1,02,958
- சேலம் - 98,826
- திருப்பூர் - 94,070
- திருச்சிராப்பள்ளி - 76,727
- மதுரை - 74,902
- காஞ்சிபுரம் - 74,384
- தஞ்சாவூர் - 74,422
- கடலூர் - 63,732
- கன்னியாகுமரி - 62,071
- தூத்துக்குடி - 56,066
- திருவண்ணாமலை - 54,625
- நாமக்கல் - 51,353
- வேலூர் - 49,597
- திருநெல்வேலி - 49,126
- விருதுநகர் - 46,191
- விழுப்புரம் - 45,653
- தேனி - 43,519
- ராணிப்பேட்டை - 43,243
- கிருஷ்ணகிரி - 43237
- திருவாரூர் - 40,989
- திண்டுக்கல் - 32,945
- நீலகிரி - 33,200
- கள்ளக்குறிச்சி - 31152
- புதுக்கோட்டை - 29973
- திருப்பத்தூர் - 29,158
- தென்காசி - 27,309
- தர்மபுரி - 28,067
- கரூர் - 23,788
- மயிலாடுதுறை - 23,107
- ராமநாதபுரம் - 20,468
- நாகப்பட்டினம் - 20,773
- சிவகங்கை - 19,991
- அரியலூர் - 16,763
- பெரம்பலூர் - 12,005
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1027
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1083
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428