சென்னை: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 326 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மேலும் புதிதாக 1,657 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்து கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 58 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 26 லட்சத்து 58 ஆயிரத்து 923 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உருவாகி இருந்தது கண்டறியப்பட்டது.
குணமடைந்தவர்கள்
இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 261 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 662 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 6 ஆயிரத்து 153 என உயர்ந்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 13 நோயாளிகளும் என 19 நோயாளிகளும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 509 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,49,270
கோயம்புத்தூர் - 2,41,945
செங்கல்பட்டு - 1,68,430
திருவள்ளூர் - 1,17,582
ஈரோடு - 1,01,586
சேலம் - 97,925
திருப்பூர் - 92,759
திருச்சிராப்பள்ளி - 75,878
மதுரை - 74,526
காஞ்சிபுரம் - 73,833
தஞ்சாவூர் - 73,178
கடலூர் - 63,302
கன்னியாகுமரி - 61,684
தூத்துக்குடி - 55,815
திருவண்ணாமலை - 54,250
நாமக்கல் - 50,442
வேலூர் - 49,343
திருநெல்வேலி - 48,833