சென்னை: கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறித்த தகவலை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, "தமிழ்நாட்டில் 15,108 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 27,463 பேர் குணமடைந்துள்ளனர். 374 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 2,90,36,960 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 21,48,352ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,280ஆக உயர்ந்துள்ளது.