தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 2,405 பேருக்குக் கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக இரண்டாயிரத்து 405 நபர்களுக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 950 ஆக குறைந்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு

By

Published : Jul 15, 2021, 10:41 PM IST

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,"தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 663 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்து 2,404 நபர்களுக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 2,405 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரத்து 860 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 25 லட்சத்து 28 ஆயிரத்து 806 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

குணமடைந்தவர்கள்

தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 29 ஆயிரத்து 950 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 3,006 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து 250 என உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள்

மேலும் தனியார் மருத்துவமனையில் 11 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 38 நோயாளிகளும் என 49 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 606 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்பவர்களில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் விழுக்காடு அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.7 என்ற அளவில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவாக 0.3 என்ற அளவில் உள்ளது.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

  • சென்னை - 5,35,747
  • கோயம்புத்தூர் - 2,26,151
  • செங்கல்பட்டு - 1,59,947
  • திருவள்ளூர் - 1,12,332
  • சேலம் - 91,527
  • திருப்பூர் - 86,184
  • ஈரோடு - 91,618
  • மதுரை - 73,121
  • காஞ்சிபுரம் - 71,035
  • திருச்சி - 71,303
  • தஞ்சாவூர் மாவட்டம் 66267
  • கன்னியாகுமரி - 59,584
  • கடலூர்- 59,266
  • தூத்துக்குடி - 54,795
  • திருநெல்வேலி - 47,501
  • திருவண்ணாமலை - 51,009
  • வேலூர் - 47,546
  • விருதுநகர் - 45,198
  • தேனி 42,722
  • விழுப்புரம் - 43,301
  • நாமக்கல் - 46,277
  • ராணிப்பேட்டை - 41,591
  • கிருஷ்ணகிரி - 40,884
  • திருவாரூர் - 37,354
  • திண்டுக்கல் - 31,912
  • புதுக்கோட்டை - 27,684
  • திருப்பத்தூர் - 27,899
  • தென்காசி - 26,652
  • நீலகிரி - 29,692
  • கள்ளக்குறிச்சி - 28,303
  • தர்மபுரி - 25,580
  • கரூர் - 22,415
  • மயிலாடுதுறை - 20,618
  • ராமநாதபுரம் - 19,856
  • நாகப்பட்டினம் - 18,241
  • சிவகங்கை - 18,395
  • அரியலூர் - 15,452
  • பெரம்பலூர் - 11,337
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,007
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: சொகுசு கார் வரி வழக்கு: நடிகர் விஜய் மேல்முறையீடு?

ABOUT THE AUTHOR

...view details