தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 1.5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு - tamilnadu corona detalis

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

covid19_details
covid19_details

By

Published : Jul 16, 2020, 12:18 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன்படி இன்று(ஜூலை 15) மட்டும் மாநிலம் முழுவதும் 4430 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஐந்தாயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 310 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

அரியலூர் - 585

செங்கல்பட்டு - 8741

சென்னை - 80961

கோவை - 1591

கடலூர் - 1624

தர்மபுரி - 264

திண்டுக்கல் - 1066

ஈரோடு - 460

கள்ளக்குறிச்சி- 1979

காஞ்சிபுரம் - 4255

கன்னியாகுமரி - 1745

கரூர் - 210

கிருஷ்ணகிரி - 306

மதுரை - 7331

நாகபட்டினம் - 388

நாமக்கல் - 212

நீலகிரி - 277

பெரம்பலூர் - 181

புதுக்கோட்டை - 780

ராமநாதபுரம் - 2076

ராணிப்பேட்டை - 1711

சேலம் - 2053

சிவகங்கை - 1103

தென்காசி - 842

தஞ்சாவூர் - 809

தேனி - 1975

திருப்பத்தூர் - 478

திருவள்ளூர் - 7573

திருவண்ணாமலை - 3349

திருவாரூர் - 795

தூத்துக்குடி- 2766

திருநெல்வேலி - 2098

திருப்பூர் - 342

திருச்சி - 1814

வேலூர் - 3191

விழுப்புரம் - 1820

விருதுநகர் - 2603

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 622

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 422

ரயில் மூலம் வந்தவர்கள்: 422

ABOUT THE AUTHOR

...view details