சென்னை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதிபதி மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் - உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன்
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக் குறைவால் இன்று (ஆகஸ்ட் 27) காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி இரங்கல் கடிதம் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், “உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாக பணியாற்றியவர். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்து சிறப்பான பரிந்துரைகளை செய்தவர்.
அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.