தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’நள்ளிரவு தடியடிக்கு காவல்துறையும், பாஜகவுமே பொறுப்பு’ - கே.எஸ். அழகிரி - நள்ளிரவு தடியடி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்றிரவு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட களேபரங்களுக்கு காவல்துறையும், பாஜகவுமே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

alagiri
alagiri

By

Published : Feb 15, 2020, 9:05 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சென்னையில் நேற்று இரவு நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுக்கிறோமே தவிர வன்முறையைத் தூண்டும் நோக்கம் அல்ல என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அவர்களின் கூற்றை ஆராய்ந்து பார்க்கும்போது வன்முறைக்குக் காரணம் அரசாக இருக்க வேண்டும் அல்லது, பாஜகவாக இருக்க வேண்டும். காவல்துறைதான் இவ்விவகாரத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளது. அரசு போராடியவர்களை பாதுகாத்து இருக்க வேண்டும். இதில் அரசாங்கம், காவல்துறை செய்துள்ள தவற்றை இனி வரும் காலங்களிலாவது இப்படி நடக்காமல் திருத்திக் கொள்ள வேண்டும்“ எனக் கூறினார்.

’நள்ளிரவு தடியடிக்கு காவல்துறையும், பாஜகவுமே பொறுப்பு’ - கே.எஸ்.அழகிரி

இதையும் படிங்க: இஸ்லாமிய அமைப்பினர் மீது தடியடி - மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details