சென்னை:ஆஹா ஓடிடி தளம் தெலுங்கைத் தொடர்ந்து தமிழிலும் அடி எடுத்து வைத்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் புத்தம்புதிய திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. குறிப்பாக, புதிய வெப் தொடர்களின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் இணையத்தொடர்களில் நடித்தவர்கள், இயக்குநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘பேச்சைக் குறைத்து செயலில் காட்ட வேண்டும் என்று பணியாற்றி வருகிறேன். என்னை அழைத்து இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று கேட்டார்கள். தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வரத்தயார். பெயரே ஆஹா ஆஹா என்றால் என்ன என்று தெரியும் உங்களுக்கு.