தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓதுவார் பயிற்சி; ரூ.3000 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - ஸ்டாலின் தொடங்கிவைப்பு - 18 மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்

ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு 3000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Tamilnadu Priest training school students incentive  Tamilnadu CM starts to increase the incentive of priest training school  CM gave 18 students incentive at chennai  ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு 3000 ரூபாய் ஊக்க தொகை  18 மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்  தமிழ்நாடு முதலமைச்சரால் தொடக்கம்
துவார் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு 3000 ரூபாய் ஊக்க தொகை

By

Published : Dec 24, 2021, 1:59 PM IST

சென்னை:மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 1,000 ரூபாய் ஊக்கத் தொகையை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இதன் அடையாளமாக 18 மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்தத் திட்டத்தில் ஓதுவார், அர்ச்சகர், இசை கற்போர் திட்டத்தில் பயன்பெறுவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி உள்ளது.

இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 551 திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details