ஆண்டுதோறும் டிசம்பர் 3 ஆம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கும் தமிழ்நாடு அரசால் விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் இன்று, மாற்றுத் திறனாளிகளின் நலனிற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விதமாக, சிறந்த நிறுவனத்திற்கான விருதுகள், சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த ஆசிரியருக்கான விருதுகள், சிறந்த பணியாளர், சுய தொழில் புரிபவருக்கான விருதுகள், மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனத்திற்கான விருதுகள், ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான விருதுகள் என 35 விருதாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.