கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, சீனாவுடனான மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேருக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ராணுவ வீரர்களுக்கு பிரதமருடன் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் பழனிசாமி - ராணுவ வீரர் பழனி
15:16 June 17
டெல்லி: லடாக் எல்லையில் நடைபெற்ற மோதிலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மௌன அஞ்சலி செலுத்தினார்.
இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் சேர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மௌன அஞ்சலி செலுத்தினார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர் இந்திய - சீன மோதலில் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உதவித்தொகையும், அரசு வேலையும் தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:எல்லையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் ஊர் விவரங்கள்