தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு
18:19 August 06
அதன்படி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதியான நாளை முதல் வரும் 23ஆம் தேதி, காலை 6 மணி வரை, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
- அதிகளவில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வரும் 23ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.
- இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, திறந்த வெளிகளில் தனித்தனி கடைகளாகப் பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- வழிகாட்டு நெறிமுறைகளுடன் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் படிப்பு, மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Last Updated : Aug 6, 2021, 11:08 PM IST