மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுடன் கரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா தலைமையில், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார், சட்டம் ஒழுங்கு ஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி பணிகளை கண்காணிக்க கால்நடைத் துறை முதன்மைச் செயலாளர் கோபால், பிற்படுத்தப்பட்ட துறை செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல், தனிமைப்படுத்துதல் முகாம், தூய்மைப் பணிகளை கண்காணிக்க மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐ பி எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Chief Secretary consults with senior officers சுகாதார கட்டமைப்பு, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் சிகிச்சை மையங்களை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பும் பணிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி செல்லும் பணியை கண்காணிக்க குழு, போக்குவரத்தை கண்காணிக்க, நிவாரண உதவி மற்றும் பொது நிவாரண நிதியை கண்காணிக்கவும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை தேவையான வசதிகளை செய்து தரும் பணிகளை கண்காணிக்கவும் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினருடன் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கவும், ஆக்சிஜன், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:தினமும் 7.5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி; 6.6 மெட்ரிக் டன் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு!