தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 394 கோடி ரூபாய் வரவு - கரோனா

சென்னை: கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 394 கோடி 14 லட்சம் 49 ஆயிரத்து 331 ரூபாய் பெறப்பட்டுள்ளது.

assembly
assembly

By

Published : Jul 22, 2020, 5:47 PM IST

தமிழ்நாடு அரசின் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 14.5.2020 அன்றுவரை மொத்தம் 367 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 343 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

21.7.2020 வரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் ஆகும். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் நரேந்திரன் மற்றும் மகள் நிரஞ்சனா ஆகிய இருவரும், தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாயை, பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகள் மற்றும் வறுமையில் வாடும் சிறுவர்களுக்காக வழங்கியுள்ளனர்.

மேலும், சென்னை, அசோக் நகரைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி லக்க்ஷா, தான் சேமித்து வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை கரோனா நோய்த் தடுப்பு நிவாரணப் பணிக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details