சட்டப்பேரவையில் இன்று கால்நடைத்துறை மானியக் கோரிக்கையில் பேசிய திமுக உறுப்பினர் உதயசூரியன், இலவசக் கோழி வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கோழிகள் குஞ்சு பொரிப்பது இல்லை என்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியதாக உள்ளதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”இலவசக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு 25 கோழிகள் வழங்கப்படுகிறது. அதில் 15 பெட்டைக் கோழிகளும், 10 சேவல்களும் வழங்கப்படுகின்றன. சென்னை வீட்டில் நான் வளர்க்கும் இரண்டு கோழிகள் தலா 14 முட்டையிட்டு 28 குஞ்சுகள் பொரித்துள்ளன.