கடந்த 17ஆம் தேதி அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 600க்கும் மேற்பட்ட காளைகளும், 900த்திற்கும் மேற்பட்ட வீர்ரகளும் பங்கேற்றனர்.
இதில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், சிறந்த காளையாக குலமங்கலத்தைச் சேர்ந்த மாரநாடு என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்குமாருக்கு கார் சாவி வழங்கிய முதலமைச்சர் இவர்கள் இருவருக்கும் பரிசாக கார் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், தலைமைச் செயலகத்தில் சிறந்த மாடுபிடி வீரர் ரஞ்சித்குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சிறந்த காளையின் உரிமையாளர் மாரநாடு என்பவருக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் கார் சாவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சிறந்த காளையின் உரிமையாளர் மாரநாடுவிற்கு கார் சாவி வழங்கிய துணை முதலமைச்சர் இதையும் படிங்க: அறிஞர்களுக்கு விருது வழங்கிய முதலமைச்சர்