தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் லண்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்காவின் ஹெல்டா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன், கொள்கை ரீதியாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைப்பது குறித்து, முதலமைச்சருடன் அந்நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணைத் தலைவர் ராபின் முகோபாத்யாய் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.