தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரூ.500 கோடியில் ஐந்து மேம்பாலங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலைப் பாதுகாப்பு ஆகியப் பணிகள் 531 கோடி ரூபாய் மதிப்பில் உலகத் தரத்துடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

By

Published : Mar 18, 2020, 5:44 PM IST

assembly
assembly

சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில்,

  • சென்னை எல்லைச் சாலையின் நான்காம் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை உள்ள பகுதியில், சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலைப் பாதுகாப்பு ஆகியப் பணிகள் உலகத் தரத்துடன் 531 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரையுள்ள 14.8 கி.மீ நீளச் சாலை, சேவையுடன் கூடிய ஆறு வழிச் சாலையாக ரூபாய் 350 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • ஓசூர், திருப்பூர், ஈரோடு, மற்றும் கரூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை இணைக்கும் சாலைகளில் ரூபாய் 361 கோடி மதிப்பில், 158 கிலோமீட்டர் நீளச் சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • சென்னை பெருநகர் மற்றும் புற நகர் சாலைகளில் வெள்ளப்பெருக்கால் மழை நீர் தேங்குவதைத் தவிர்க்க, புதிய வடிகால் மற்றும் சிறு பாலங்கள் ரூபாய் 277 கோடி மதிப்பில் கட்டப்படும்.
  • திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு உயர்மட்ட சாலை மேம்பாலம் மற்றும் மதுரை, தேனி மாவட்டங்களில் சாலைகள் மேம்பாடு செய்யவும் விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 3.25 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
  • 11 மாவட்டங்களில் 20 தொடர்வண்டி மேம்பாலங்கள் கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 7.44 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
  • 109 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் உலக வங்கியின் நிதி உதவியுடன் ரூபாய் 1500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.
  • பாம்பன் கால்வாயை சிறிய மற்றும் நடுத்தரக் கப்பல் போக்குவரத்திற்காக 10 மீட்டர் ஆழத்திற்கு தூர்வார, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்.
  • சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையின் பிரதான ஐந்து சந்திப்புகளில் ரூபாய் 500 கோடி மதிப்பில் ஐந்து மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
  • சென்னை மாநகரின் மூன்று பிரதான சாலைகளை சீர்மிகு சாலைகளாக அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 9.10 கோடி மதிப்பிலும், அண்ணா சாலையில் முத்துசாமி பாலம் முதல் தாம்பரம் வரை மற்றும் தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மாற்று வழி அமைக்க 38 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.
  • வண்டலூர் சந்திப்பில் பாதசாரிகளுக்கான மேம்பாலம் ரூபாய் 16.17 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details