தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ மைதான வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுநாளான இன்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தமர் காந்தியின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
உத்தமர் காந்தி நினைவு நாள்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு - தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
சென்னை: உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளான இன்று முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
memorial
அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் இசைக்கருவிகள் முழங்க காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க அமைச்சர்கள், அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி நினைவுநாள்: ராஜ்கோட் நினைவிடத்தில் மத நல்லிணக்கப் பிரார்த்தனை