தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய அரசின் திட்டப் பட்டியலில் தமிழ்நாட்டின் 179 திட்டங்கள் சேர்ப்பு - Budget 2020

சென்னை: மத்திய அரசின் திட்டப் பட்டியலில் தமிழ்நாட்டின் 179 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

allocation for planning in TN budget
allocation for planning in TN budget

By

Published : Feb 14, 2020, 12:23 PM IST

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஓதுக்கீடு அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துவருகிறார்.

பெரும் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்:

  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 'தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023' வெளியிட்டிருந்தார். அந்தத் திட்டத்தில் உள்ள பல திட்டங்களை தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவருகின்றன
  • ஏற்கனவே நாம் திட்டப்பட்டியலை தயார் செய்து வைத்திருந்ததால், சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்புப் பட்டியலில் தமிழ்நாட்டிற்குப் பயனளிக்கும் பல திட்டங்களைச் சேர்க்க முடிந்தது. அதன்படி தமிழ்நாட்டின் ரூ. 8.58 லட்சம் கோடி செலவிலான 179 திட்டங்கள் மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன
  • தமிழ்நாட்டில் எட்டுப் பெரிய திட்டங்களுக்கு முதலீடுகள் தயார் நிலையில் உள்ளன
  • தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழக திட்டங்களில் ரூ. 2000 கோடி முதலீடு செய்ய தயார் நிலையில் உள்ளது
  • கிராமப்புற, நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்படாத மிக அத்தியவசியமான சிறு சிறு பணிகளை மேற்கொள்வதன் மூலம் அப்பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய இயலும். எனவே 2020-21ஆம் ஆண்டில் இத்தகைய அத்தியவாசியமான உள்கட்டமைப்புப் பணிகளை 500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020 - வேளாண் துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details