தமிழ்நாடு

tamil nadu

'பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்' - எல். முருகன்

By

Published : Jul 9, 2020, 4:43 PM IST

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

BJP murugan press meet
தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கேரள அரசு உயர் அலுவலர் ஸ்வப்னா, 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைக் கடத்திய விவகாரத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகி, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து கேள்விக்கு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்ப மாநில அரசுகள் வரியைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார்.

தமிழ்நாடு பாஜக செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும் அவர், ”நாளை பாஜக மாவட்டத் தலைவர்கள் சுய சார்பு பாரதம் குறித்து செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். உலகளவில் வல்லரசு நாடுகள் கரோனாவைக் கட்டுபடுத்த திணறிவருகின்றனர். இச்சூழலில் இந்தியாவில் பிரதமர் மோடி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கரோனா கட்டுக்குள் உள்ளது. மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 80 கோடி மக்களுக்கு அரசு உதவி செய்யும் வகையில்,

  • மக்கள் உணவில்லாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு 1.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது
  • 8.70 கோடி விவசாயிகளுக்கு 17 ஆயிரத்து 890 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
  • இலவச கேஸ் சிலின்டர் 8 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது
  • மகளிர் வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
  • 21 லட்சம் கோடி ரூபாய் சுயசார்பு பாரதம் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது
  • ஒரே ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்திற்கு 74 ஆயித்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தங்க கடத்தல் ராணி ஸ்வப்னாவுக்கு முன்பிணை கோரி மனு!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான திட்டத்தில் பலனடைந்தோரில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலுள்ளது. 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறு, குறு நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details