சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக அக்டோபர் 30ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற அக்.30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி அக்.30ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க உள்ளதாவும் கூறப்படுகிறது.