குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்போர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியும், படுகொலைசெய்தும், பயமுறுத்தும் வேலைகள் நடைபெற்றுவருவதாகக் கூறி தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் இன்று பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், கருப்பு முருகானந்தம், வினோஜ் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
முதலமைச்சரை சந்தித்தப் பின், செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திரன், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக காவல் துறையில் புகாரளித்தும் எங்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் விஜய் ரகு கொலைசெய்யப்பட்டதை ’லவ் ஜிகாத்’தாகத்தான் பார்க்க வேண்டும்.