சென்னை:தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பற்றி பாஜக சட்டபேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி கேட்கும்போது, ஆண்கள் கையில் வரும் வருமானம் பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போயிடும். ஆனால் பெண்கள் கையில் கொடுக்கும் பணம் முழுக்க முழுக்க குடும்பச் செலவுக்கு பயன்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேரவையில் இருந்த ஆண் எம்.எல்.ஏக்கள் சத்தம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கு சபாநாயகர் அமைதி காக்கவும் எனத் தெரிவித்து, கேள்வி நேரத்தில் ’கேள்வியை மட்டும் கேளுங்கள்’ எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், ’மத்தவங்க எல்லாம் கொதிக்க வேண்டாம், எதற்கு கொதிக்க வேண்டும். நான் எல்லோரையும் சொல்லவில்லையே’ எனத் தெரிவித்தார்.