சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ஆம் தேதி வரை நடந்தது. அடுத்ததாக ஆறு மாதத்திற்குள், அதாவது வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்.
அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும்.